கே.எ. செங்கோட்டையனால் பரபரக்கும் அரசியல் களம்

கே.எ. செங்கோட்டையனால் பரபரக்கும் அரசியல் களம்

குறைந்தபட்சம் 4 முதல் 5 முக்கியஸ்தர்கள் விஜயோடு பயணிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

இது தொடர்பாக கேசி பழனிசாமி தந்தி டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில்... 
"தவெகவில் முதல் முறையாக ஒரு வேஷ்டி கட்டிய தலைவர் இணைந்துள்ளார். முதலில் அவரது அரசியல் பத்திரமாக இருக்க வேண்டும். அடுத்து அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்துள்ளனர். அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு அவர் முயற்சி செய்தார்.. அப்படிச் சொல்லிவிட்டு, அதிமுகவினரை தவெகவில் ஒருங்கிணைக்கும் பணியைத் தான் செங்கோட்டையன் செய்துள்ளார். இந்த வேலையை தான் செங்கோட்டையனுக்கு விஜய் வழங்கி இருந்தார் போல!

செங்கோட்டையனால் பரபரப்பாகும் அரசியல், தோல்வி பயத்தில் மற்ற கட்சி. பீகார் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவினர் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டு இருந்தது. எப்படியும் அடுத்த தேர்தலில் வென்றுவிட முடியும் என நம்பினர். ஆனால் செங்கோட்டையனின் இந்த நடவடிக்கையால் அதிமுக தொண்டர்களிடையே ஒரு சோர்வு ஏற்பட்டுள்ளது. அதை நாம் மறுக்க முடியாது. திமுகவை வீழ்த்தி தவெகவினர் வென்று ஆட்சியைப் பிடிப்பார்களா எனத் தெரியாது. ஆனால், அதிமுக வெற்றியைத் தடுக்கும் பணியைத் தான் அவர்கள் செய்ய முயல்வார்கள். செங்கோட்டையனுக்கு நான்கு மாவட்ட பொறுப்புகள் தரப்பட்டுள்ளது. இன்னும் குறைந்தபட்சம் 4 முதல் 5 முக்கியஸ்தர்கள் விஜயோடு பயணிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஏற்கனவே தென் மாவட்டங்களுக்குத் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் இருக்கிறார்கள். டெல்டாவில் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் இருக்கிறார்.

அதேநேரம் இதனால் கட்சி பாதிக்கப்படுகிறதே.. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.. நாம் ஆட்சி அமைக்கிற வாய்ப்புகள் பறிபோகிறதே என்று ஒரு கலக்கம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.